அவள் அப்படித்தான்

அவள் அப்படித்தான்
------------------------------

நாட்பத்தைந்து வயதான சென்னை மேன்ஷனில் ஒண்டிக் கட்டியாக வாழ்ந்துக் கொண்டிருந்த அவனுக்கும் கிராமத்தில் இருந்த முப்பைத்தைந்து வயதான அவளுக்கும் திருமண மாகி ஒரு வாரம் ஆகி விட்டது . இதுவரை இருவருக்கும் ஒரு புரிதலோ தொடுதலோ இல்லை . அதைப் பற்றி இருவரும் ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்வதும் இல்லை.

சென்னை வாழ்க்கை அவளுக்கு ஒரு புதிராக இருந்தாலும் அதைப் பற்றி அவள் அவனிடம் ஒன்றும் பேசுவதில்லை.
இருண்டு கோள்கள் ஒரு அண்டத்தில் ஒன்றாக சுற்றுவதுபோல் இந்த ஒரு வார வாழ்கையை வாழ்ந்துக் கொண்டிருந்தனர்.

அலுவலக நண்பர்கள் அவனை அதைப் பற்றி கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தனர். அவனும் அவர்களிடம் ஒன்றும் சொல்லாமல் வெட்கத்துடன் நகர்ந்துக் கொண்டிருந்தான். ஆனால் தனக்குளே அவன் அந்த கேள்வியை கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.

அன்று வார விடுமுறை ஆனதால் அதி கலையில் எழுந்து பெட் காபி யை கலந்து சுருண்டு படுத்துக் கொண்டிருக்கும்
அவளை தொட்டு எழுப்பும் போது அலறி எழுந்த அவள் பயத்துடன் விலகி வெல வெலுத்து நடுங்கி நின்றதைப் பார்த்து
அவன் பயந்து விட்டான். நிலை குலைந்துப் போன அவன்

செவந்தி .... ஏன் இப்படி பயபடுரே ....! நாம் இருவரும் கல்யாணம் கட்டிக் கொண்ட புருஷன் பொண்டாட்டி இல்லையா ?
உன்னை தொடுவதற்கு எனக்கு உரிமை இல்லையா ... ?

இதோ பார்யா ... என்னை தொட முயற்சிப் பன்ன ... என்னை நானே கத்தியில் குத்திக் கொண்டு செத்துப் போவேன் ....
மரியாதையா என்னை தனியே விடு ...!

அவன் ஒன்றும் சொல்லாமல் வெளியே போய் விட்டான் . ஊருக்கு போன் போட்டு அவள் பெற்றோரை வரவழைத்தான்
அவள் நடந்துக் கொண்ட முறையை விவரித்தான் . அவர்கள் அவனிடம் மாப்பிள்ளை ....அவள் அப்படிதான் போகப் போக சரியாகிவிடுவாள் என்றனர். அவனும் அவள் அப்படிதான் என்று தன் கல்யாணம் ஆகியும் பிரமச் சாரி வாழ்க்கையை
வழ்ந்துக் கொண்டுவந்தான் .

நாட்கள் வாரங்களாகின, வாரங்கள் மாதங்களாகின, மாதங்கள் வருடங்களாகின , அவளிடமிருந்து எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியேத்தான் இருந்தாள். அவனும் அப்படியேதான் அவளுடன் வாழ்ந்துக் கொண்டிருந்தான்.

அனால் அவர்களுக்குள் இப்போது ஒரு புரிதல் மட்டும் தான் இருந்தது. அது காலம் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்த பாடம். வருடங்கள் உருண்டுப் போனதால் அவர்கள் வாழ்க்கையும் காலத்தால் இழுத்துச் செல்லப் பட்டது. இப்பொழுது அந்த வீட்டில் இரு முதியவர்கள் வாழ்ந்து கொண்டு இருந்தனர். அவர்களுக்குள் இன்னும் ஒரு தொடுதல் இல்லாமல் தான் இருந்துக் கொண்டிருந்தது. இப்பொழுது எல்லாம் அதன் காரணத்தை அவனும் கேட்பதில்லை. அவளும் அவனுக்கு சொன்னது இல்லை.

காலம் தன் கடமையை செய்தது. அந்த வீட்டில் அவள் மரணப் படுக்கையில் கிடக்கிறாள். கட்டிலை சுற்றி அவள் உறவினர்கள் . அவன் கொஞ்ச தூரத்தில் அமர்ந்து அவளையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் .

அவளுக்கு மூச்சி இழுத்துக் கொண்டிருந்தது, தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனை சற்றே தலையை திருப்பி அவளும் பார்த்துக் கொண்டிருந்தாள், அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்துக் கொண்டிருகிறது .

பெரியவரே ...! கிட்ட வாங்க .....!

பெரியம்மா உங்க கிட்ட எதுவோ சொல்ல துடிக்கிது ...... யாரோ கூப்பிட ....

அவள் அருகே போய்..... குனித்து அவள் கைகளைப் பிடிக்கும் போது........

அந்த கைகளுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு பலம் வந்ததோ, சட் டென்று..... உதறிய அவள் ....!
தலையை திருப்பி ...பட் டென்று கண்களை மூடிக் கொண்டாள்......! இழுத்துக் கொண்டிருந்த அவள் மூச்சி
நின்று விட்டது.

தூர விலகிவந்த அவர் (இப்போது அவனை அவர் என்று சொல்லலாம் ) சோர்வுடன் அமர்ந்தார் ...........!
அமர்ந்தவர் மீண்டும் எழவில்லை ......! அவரின் உயிரும் போய் விட்டது .......!

அங்கிருந்தவார்கள் ...... அவர்களை இதுதான் தாம்பத்தியம் ....! இதுதான் காதல் வாழ்க்கை ...! என்று அந்த
இருவரையும் வாழ்த்தினார்கள் ....! அவர்களுக்கு தெரியுமா ... பெரியவர் அவள் அப்படிதான் என்று முனகிக் கொண்டே
தன் மூச்சை விட்டார் என்று ....!

ஆமாம் ...! அவள் ஏன் அப்படி நடந்துக் கொண்டாள் ....!
அவள் அப்படித் தான் .

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (9-Jul-14, 5:52 am)
Tanglish : aval abbadiththan
பார்வை : 134

மேலே