காதல் நிலா --- நாகூர் லெத்தீப்----
நிஜத்திலே
தெரிவது நிழலாக
மறைவதேன்
உன்னால்.........!
மழை துளிகள்
உன்மீது
சிநேகம் கொண்டது
நினைந்தது........!
நீ விரும்பும்
இதயம்
உன்னை நேசிக்கிறது
தவிக்கிறது.........!
எனது உள்ளம்
தேடுகிறது
உன்னை நேசிக்க
என்றுமே........!
எத்தனை
மாற்றம் உன்மீது
எத்தனை
தேட்டம்
என்ன காரணம்.........!
மனதை
வருடியவள் எனை
யாசித்து சென்றால்
எதனால்...........!
புரியாத
உறவு தெரியாத
ஊடல் நமது
இருவருக்கும்..........!

