பணி ஓய்வு கவிஞர் இரா இரவி

பணி ஓய்வு ! கவிஞர் இரா .இரவி !

பெற்றவுடன் ஓய்ந்து விடுகின்றனர் பலர் !
பெற்றதும் ஓய்வின்றி உழைக்கின்றனர் சிலர் !

ஓய்வுக்கு ஓய்வு தந்து
உழைப்புத் தேனீயாகின்றனர் சிலர் !

பணி ஓய்வு ஊதியம் பெறும் பணிக்குத்தான் !
ஓய்வு என்றுமில்லை படைப்பாற்றல் பணிக்கு !

மூச்சு உள்ளவரை ஓய்வின்றி
உழைப்பதே மனிதனுக்கு அழகு !

ஓய்ந்து இருந்தால் இரும்பு மட்டுமல்ல
மனித மூளையும் துருப்பிடிக்கும் !

இலக்கியத்தில் ஈடு படலாம் !
இதயத்தை இதமாக்கும் !

ஓவியம் வரையலாம் !
உலகம் பாராட்டும் !

பிடித்த நல்ல செயல் எதுவானாலும் !
செயல்பட்டுக் கொண்டே இருங்கள் !

உடலுக்கு ஓய்வு சிறிது தேவை !
சிந்தைக்கு ஓய்வு தேவையன்று !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (9-Jul-14, 9:17 am)
பார்வை : 270

மேலே