விதியின் விளையாட்டுநிறைவுப்பகுதி

கோவிலின் வாசலில் இறங்கிய இவர்கள் பார்த்த முதல் காட்சி மதன்,உமா தம்பதியர் வருகை...........

ரிஷானியை மனோஜுடன் பார்த்ததும் ஒரு நிமிடம் திடுக்கிட்ட மதன் மனதிற்குள் அவள் தான் இப்பொழுது நம் காதலி இல்லையே என்று நினைத்துக்கொண்டான் இருந்தாலும் மனதில் ஏதோ ஒரு தடுமாற்றம் குற்ற உணர்வாய் இருந்தது......அவளை பார்த்தும் பார்க்காதவனாய் அங்கிருந்து தன மனைவியுடன் நகர்ந்து சென்று விட்டான் மதன்....!

உள்ளே சென்ற ரிஷானி அவனை திரும்பி பார்த்தாள் ஆனால் அவனோ இவளை கண்டுக்காமல் உமாவிடம் கொஞ்சி பேசி சந்தோஷமாக இருந்தான்.
இப்படி மாறியிருக்கிறானே மதன் என்று மனதிற்குள் நினைத்தாள்????

இருவரும் சாமி கும்பிட்டு பூஜை எல்லாம் முடிந்த பிறகு வீட்டிற்கு கிளம்ப தயாரானார்கள் அப்பொழுது மனோஜ் தன கையிலிருந்த குங்குமத்தை ரிஷானிக்கு வைத்து விட்டான்.

வீட்டிற்கு வந்ததும் பெற்றோர்கள் இருவரும் சாப்பிட்டு விட்டு நெடுநேரம் இருவரும் மொட்டை மாடியில் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தனர் இப்பொழுது மனோஜ் கொஞ்சம் கொஞ்சமாக ரிஷானியை பழையபடி ரசிக்க ஆரம்பித்தான், அவளுடைய பேச்சை ஆழ்ந்து ரசித்துக்கொண்டிருந்தான்........!

அதை புரிந்துகொண்ட அவளும் அதற்கேற்றார் போல் அவனிடம் நடந்து கொண்டாள்.

இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு புது வாழ்க்கையை தொடங்கினர் இருவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர் மாதங்கள் செல்ல செல்ல இருவருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் வர ஆரம்பித்து அது பெரிய சண்டையில் போய் முடிந்தது ஒரு நாள் ரிஷானி மிகுந்த வருத்தத்தில் தன்னையே மறந்து இருந்தாள்.......!

கணவன் மனைவிக்குள் நடக்கும் பிரச்சனைகளை தாயிடமோ, அத்தையிடமோ வெளிக்காட்டிக்கொள்ளமாட்டாள் ரிஷானி....,

நான் குளித்துவிட்டு வருகிறேன் எனது துணியை அயர்ன் பண்ணி வை என்று சொல்லிவிட்டு குளிக்க சென்றான் மனோஜ்.........

தன்னை மறந்து வருத்தத்தில் ஆழ்ந்த ரிஷானி அப்படியே தூங்கி விட்டாள்,

குளித்து விட்டு வந்தவன் அவள் துங்கிக்கொண்டிருப்பதை பார்த்ததும் கோவமாக கத்தினான் என்னடி இது நான் என்ன சொன்னாலும் செய்யாமல் இப்படி இருக்கிறாய் எல்லாம் என் தலைஎழுத்து ஷிவானி என்னை எப்படி பார்த்துப்பாள் எதுவும் நான் சொல்லவேண்டாம் நான் மனதில் நினைப்பதை அவளே செய்து முடிப்பாள் நீயும் இருக்கியே என்று கத்தி விட்டு கிளம்பி விட்டான்............??????

மனோஜ் ஏன் இப்படி இருக்கிறான் கடவுள் ஏன் நம்மை இப்படி ஆக்கிவிட்டார், மதனை திருமணம் செய்திருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கலாம் அவன் அவள் மனைவியை எவ்வளவு பாசமாக வைத்துள்ளான் நமக்கு கிடைக்க வேண்டிய வாழ்வு இப்படி ஆகிவிட்டதே என்று ஏங்கினாள்...!
ரிஷானியிடம் சண்டை போட்டு விட்டு சென்ற மனோஜால் நிம்மதியாக இருந்து தனது வேலைகளை செய்ய முடியவில்லை ஒரு குற்ற உணர்வு அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.........

ஆம்! எப்பொழுதும் ரிஷானியை கோவித்துக்கொண்டிருக்க காரணம் என்ன????

அவள் தான் நம்மிடம் அன்பாக நடந்து கொள்கிறாளே! இருந்தும் அவள் செய்யும் சிறு தவறுகளை நம்மால் ஏன் சகித்துக்கொள்ள முடியவில்லை பாவம் அவள் காலையில் என்ன கஷ்டத்தில் இருந்தாளோ தெரியவில்லை இருந்தும் நான் அவளை கவலை பட வைத்து விட்டு வந்தேனே?????????

இதற்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான்,

"ஷிவானியுடன் ரிஷானியை ஒப்பிட்டு பார்ப்பதுதான் நாம் செய்யும் முதல் தவறு
இனிமேல் ரிஷானி என்ன செய்தாலும் நாம் நம் மனைவியை அவள் விருப்பப்படி விட்டு விட வேண்டும் பிறருடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது"
என்ற முடிவுடன் கல்லூரிக்கு விடுப்பு கொடுத்து விட்டு ரிஷானியிடம் மன்னிப்பு கேட்க புறப்பட்டான்.........!

இன்னொரு பக்கம் ரிஷானி "நம் அன்புக்கணவனே இப்படி இருந்தால் நாம் யாரை நம்பி வாழ்வது அவருக்காகவே நம் வாழ்வு என்றிருந்தேன்,

இன்று எல்ல்லாம் தலைகிழாக மாறிவிட்டது இனி நமக்கென்று எந்த சந்தோஷமும் வேண்டாம் அவருக்காவே வாழலாம் என நினைத்தவளின் மனதின் ஓரத்தில் ஒரு சிறு கேள்வி?????

நாம் ஏன் நிம்மதி இல்லாமல் இருக்கிறோம் அனைவரின் வாழ்விலும் பிரச்சனைகள் வரத்தான் செய்யும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் வாழ்வதுதான் வாழ்க்கை,

நாம் மதனோடு அத்தானை ஒப்பிட்டு நினைக்காமல் அனைவரின் வாழ்விலும் இப்படிதான் என்று நினைத்து இருந்தால் எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும் என்று தன தவறை உணர்ந்தவள் மனோஜின் வருகையை நோக்கிக்கொண்டிருந்தாள்........!சுபம்

எழுதியவர் : ப்ரியா (11-Jul-14, 4:53 pm)
பார்வை : 448

மேலே