வெல்ல வா
வெல்ல வா . ...!!
அன்பை ஈர்ந்த தந்தை தாய்
அவர்கள் அருளினால் உலகை என் பக்கம்
ஈர்த்து ...
அறிவை .. அறியாமைகளை வெட்டி வீச
அரிவாளை போல் முனைப்பாய் உருவாக்கிய
ஆசான்களின் பயிற்சியால் உயர்வதற்கான
நுட்பங்களை வளர்த்து ...
உயர்வாய் கருதப்படும் நட்பு என்னும்
இனிய உறவினால் நல்லவர்களின் துணையால்
நல்ல நல்ல ஆலோசனைகளால் வளர்ச்சி
படிகளை கண்டறிந்து ..
உழைப்பே உயர்வு தரும் என்பதற்கு
எடுத்துகாட்டாய் விளங்க முயற்சிகளை ஈடுபாடோடு
முன்னேற்ற பாதையை தேர்ந்தெடுத்து ...
வாழ்கையின் பயணத்தை வெல்லவா...
இதை போல் நல் இளைஞ்சனே நீயும் வெல்ல வா ..!!!