கண்ணீர்

தெவிட்டும் தென்றலில் என்
மூச்சு கரைய,
படபடக்கும் நெஞ்சுக்குள்
உயிர் மூச்சு விரைய,
நாசி தட்டி, குரல்வளை கீழிறங்கி மூச்சடைத்து,
கண்கள் கரித்து,
தெரித்து விழுந்ததொரு
கண்ணீர் துளி!...
பாடுபட்டு உருவாக்கி என்ன பயன்
யாரும் அறியா வண்ண்ம்
துடைத்தெரிந்தேன்!....
என் சிரிப்பினில் கலந்து இருந்தால்
பெரும் பேறு பெற்றிருக்கும்...
என் சோகத்தினைப்
பறைச்சாற்ற அது எதற்கு,
ஒரு விழுக்கல் நீரில்
ஒழிந்து போய்விடும்...

எழுதியவர் : கவிதா குமரன் (21-Jul-14, 2:43 pm)
சேர்த்தது : kavitha kumaran
Tanglish : kanneer
பார்வை : 73

மேலே