அவளே ஒரு கவிதை
எப்போதும் விழிகளில்
சிரிப்பினைச் சிந்துபவள் அவள்...!
"என்னைப் பற்றி ஒரு கவிதை சொல்"
என என்னிடம் கேட்டதே
இல்லை...
ஆனால் நான் என் கவிதை
தமிழுக்குள் பொருளாக
அவளை கொணர வேண்டுமே, என் தோழி
என எதையும் எதிர்பார்க்காத
அவளுக்காக..
விழிகள் சுருக்கி மெல்லிய
இதழ்களில் கீற்றாய் புன்னகை
பூப்பவள்...
எப்படி சொல்வேன் அவளிடம்
அவளே ஒரு கவிதை என்று.....