மனைவி

முதலில் இனித்தது !

இனித்து இனித்து
புளித்தது!

புளித்து புளித்து
கசத்தது !

கசத்து கசத்து
கடிந்தது !

கடிந்து கடிந்து
வலித்தது !

வலித்து வலித்து
பழகிப் போனது!

மதிப்பும் மரியாதையும்
தூரம் போனது !

வாழ்க்கையே சாபமானது
திருமணமோ தண்டனையானது!

* * *

நாற்பது வயதுக்கு மேல்
அறிவு வந்தது !

அறிவு கேட்ட ஜடம்
என்றாள்!
நன்றி என்றேன் !

எங்க சுத்திட்டு வார
என்றாள்!
சப்பிட்டியாம்மா
என்றேன் !

எல்லாம் என் தலைஎழுத்து
என்றாள்!
எனக்கு சரியான
துணைவி நீதான் என்றேன் !

புத்தி கெட்டு போச்சு
என்றாள் !
உன்னை காதலிக்கறேன் என்றேன்!

பதிலுக்கு பதில்
சொல்லவில்லை
மௌனம் காத்தேன் !

சிலகாலம் கழித்து
வாழ்க்கை இனித்தது !

இனித்து இனித்து
வாழ்க்கை சுகமானது !

பதிலுக்கு பதில்
பாசம் வந்தது !

கல்லெறிந்தால் கல்லும்
பூவீசினால் பூவும் !

மனைவி துனைவியாவதும்
தூரமாய் போவதும்
உன்கையில்!
உன்வார்த்தையில் !

எழுதியவர் : கோடீஸ்வரன் (21-Jul-14, 7:49 pm)
Tanglish : manaivi
பார்வை : 102

மேலே