குறிஞ்சி பூக்கள்
குறிஞ்சி பூக்கள் !!!
ஈறடி குறளாய்
இணைந்திருந்தோம்,
ஈடு குடுக்க
எவரின்றி இறுமாப்பு
கொண்டிருந்தோம்!
அறநூல்களை
அரவெருத்து ,
அரும்புகளாய்
பூத்து நின்றோம் !
அன்பால்
இணைந்திருக்க ,
மாமன் மச்சான்
சொல்லியழசோம் !
சொந்தங்கள்
ஏதும் வேண்டா,
சுத்தி நின்று
சுளுரைசோம் !
எதுகை மோனை
சந்தமில்ல,
சிலேடையால்
சிரித்து மகிழ்ந்தோம்!
புங்கன் மர
நிழல் தேடி,
இளைப்பாறி உண்டு
மகிழ்ந்தோம்!
எதிர்மறை
கருத்தில்லா
ஏளனம்
செய்து கொண்டோம்!
கோரிக்கை
ஏதுமின்றி கேளிக்கையால்
வகுப்பை
புறக்கணிப்போம்!
எதிர்பார்பேதுமின்றி
ஏணியாய் உடனிருப்போம்,
ஏற்றம் பல கண்டும்
நன்றியை புறக்கணிப்போம்!
வலிக்காத
வார்த்தை கொண்டு
வயல்போல
செழித்து நின்றோம்!
விழியோர நீருகே
விடை கொடுத்து,
தோள் வழி
துணை கொடுத்தோம்!
நல்லாசிரியர்
பல பெற்று
நட்பால்
உயர்வுற்றோம்!
தொடராது என தெரிந்தும்
தொடர்பெண்ணை
பதிந்துவைதோம்!
தொங்க விட்ட
தோள் பையில்
தொலைபேசி
ஒழிச்சு வச்சோம்!
மின்னஞ்சல்
வாழ்த்துதல் மிச்சமாய்
முகநூலின் சொச்சமாய்,
முடிவில்லா
பயணமாய் -பணியோடு
பளுவாக பாதை யறியா
புழுவாக! விலகாமல்,
விலகி நின்னு
விடுகதை விடையாய்
விடுமுறை நாள்
ஏங்கி நின்னோம்!
இதுதான்
என தெரிந்தும்
ஏக்கம்
பல கொண்டு
எதிபார்த்தே
நகர்கின்றோம்!
பனிரெண்டாண்டு
குறுஞ்சி பூவாய்
கைகோர்ப்போம்
என்ற நம்பிக்கையில்
உறைந்துள்ளோம்!!!
நாட்களை தேடி
நகர்கின்றோம் !!!

