காகிதப் பூக்களின் கதை

காகித இதழ்களால்
புன்னகைத்து பார்க்கிறது
அந்தக் காகிதப்பூ

சாலை நிழலையும்
பார்வைக்கு மட்டும் வனப்பையும்
உடலேல்லாம் முள்ளையும்
கொண்டு
பக்கத்து தோட்டத்தில் எட்டிப் பார்த்தது
தனை போலவே முள் சுமந்த ரோஜாவை

வாடமலிருக்க ஏதோ திராவகங்கள்
பூச்சிட்டு மலர்ச்செண்டாய் காதலன்
கைவசமானாள் ரோஜா......மலராக....

இரவோடு புன்னகைக்காமலே
மல்லிகைத் தங்கை மொட்டாக
மங்கை கூந்தலுக்குள் மாட்டிக்கொண்டாள்

பக்கத்தில் இருந்த சாமந்தி
இன்றுதான் மொட்டவிழ்ந்தாள்
மாலைக்குள் மாலையாகி
இறைவனடி சேர்ந்தாள்.

இறுதி அஞ்சலிக்கு
தமை ஈகம் செய்த
பூக்கள் ..
வீதி ஓரமாய் ஒய்யாரமாய்
கடமையை செய்துட்விட களிப்பு
பெருமூச்சோடு கிடப்பதாய்
உணர்ந்தது
இந்தக் காகிதப்பூ

சாலை ஓரம் ஆயிரம்
பூக்கள் மொனத்தவம் புரிந்து எவ்வாறோ
பிறவிப்பலன் பெற்றுவிடுகின்றன
ஆனால்
முதிர் கன்னியாய் காலனை மட்டும்
அணைக்கும் பூக்களும் பூமியிலுன்டு.
இந்த காகிதப் பூக்கள் போல

எழுதியவர் : ராதா (1-Aug-14, 10:34 pm)
பார்வை : 191

சிறந்த கவிதைகள்

மேலே