மண்ணில் தவழும் என் மடி மீன் - தாய்ப்பால் நாள் போட்டிக் கவிதை

மண்ணில் தவழும் என் மடி மீன்!
விண்ணில் ஒளிரும் என் விடி மீன்!

கண்ணில் மணி போலே வாழ்வின் வரமானாய்!
கண்ணே என் தேனே இனிக்கின்ற சுரமானாய்!

மின்னல் ஒளியும் உன் மிளிர்கின்ற நகையாலே!
இன்னல் ஒழியும் உன் தளிர்க்கின்ற மொழியாலே!

அன்னமே! திங்களே! தென்றலாய் ஓடி வா!
அன்னையின் கொங்கைகள் பால் பொங்கித் தேடுதே....


**************************************************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (1-Aug-14, 10:45 pm)
பார்வை : 1810

மேலே