தத்துவம் கூறவில்லை நானும்

தனித்து தெரிந்தால் வெற்றியென
--இனித்திடும் இதயங்கள் பலர் !
தனித்து நிற்பதால் பெருமையென
--இன்பகனவு காணும் சிலர் !

தனிமையில் இன்பம் காண்பதே
--இதயத்தின் விழைவு என்பதே !
தனிமையில் பிறந்திடும் சுகமே
--தனிமையில் இருந்திடும் அகமே !

தனியாக வென்றால் கூடிடுமே
--தனிஒருவன் புகழும் பரவிடுமே !
தனியாக தரணியில் பெயரெடுப்பின்
--தனிஒருவன் வரலாறு என்றாகிடுமே !

தனிமைக்கு என்றுமே மவுசுதான்
--தனிசுகம் பிறந்திடும் மனதுக்கு !
தனிமைக்கு தனிப்பெரும் ஆற்றலே
--தணித்திடும் தனிமனதின் தாகத்தை !

தனித்து இருப்பதும் தவறல்லவே
--தத்துவம் கூறவில்லை நானும் !
தனித்து வாழ்ந்திட நினைப்போரும்
--தரணியினை ஆளவும் இயலுமே !


பழனி குமார்

எழுதியவர் : (10-Aug-14, 7:26 am)
பார்வை : 296

மேலே