டயட் DIET

ஆதிக்கு புதிதல்ல இது...
இரண்டுமணி நேர நடைப்பயிற்சி...

நடையாய் நடந்து,
உடல் மெலிய ஆவன செய்தும்,
இசைய மறுக்கிறது
பெருத்த தசைகள்!

இதோ!
இன்றும், என்றும் போல முன்நோக்கி
நடந்துகொண்டிருக்கிறான்...
நினைவுகளில் சற்றே பின்சென்றவாறு...

ஓட்டமாய் ஓடி
உருட்டி விளையாடிய
சைக்கிள் டயர்கள்,
ஒட்டியிருந்த வயிற்றை
இன்று அவனில் தேடக்கூடும்!

கொழுப்பில்லாத
மெயின் ரோட்டு நீர் மோர் குவளைகள்
இன்று அவனது
சதைபிடித்த கன்னங்களைக் கிள்ளி,
எள்ளி நகையாடக் கூடும்!

அந்நாட்கள்,
அவனுக்கு பிடித்தவை,
சதைபிடிப்பு அற்றவை.
எதுவும் செய்யாமலே,
அவனுக்கு ஆறு பைகள் தந்து
ஆறுதல் சொன்னவை.

இன்று, பட்டணம்,
படிப்புக்கு சம்பந்தம் இல்லாத
ஆனால், பணம் கொழிக்கும் ஒரு வேலை!
மிக முக்கியமாய், தொப்பை!

pizza, burger, atm, alchohol apartment
அற்புதம்
அபரிமிதமான
ஆபத்தான...பணம் !!!

நடை முடிவுறுகிறது.
AC அணைத்து,
இறங்குகிறான்
TREADMILL இல் இருந்து!

ஆதி!
மறுபடியும் அன்றாட வாழ்க்கையை
தொடங்குகிறான்...
CHEESE BREAD ஆம்லெட்டோடு...

எழுதியவர் : அக்னிபுத்ரன் (10-Aug-14, 3:01 am)
பார்வை : 181

மேலே