Agniputhran - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Agniputhran |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 14-Jan-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Mar-2011 |
பார்த்தவர்கள் | : 677 |
புள்ளி | : 257 |
தமிழெனும் அமுதை அள்ளிப் பருகி
தாகம் தீர்க்கும் எண்ணத்துடன்
- அக்னிபுத்ரன்
ஆதிக்கு புதிதல்ல இது...
இரண்டுமணி நேர நடைப்பயிற்சி...
நடையாய் நடந்து,
உடல் மெலிய ஆவன செய்தும்,
இசைய மறுக்கிறது
பெருத்த தசைகள்!
இதோ!
இன்றும், என்றும் போல முன்நோக்கி
நடந்துகொண்டிருக்கிறான்...
நினைவுகளில் சற்றே பின்சென்றவாறு...
ஓட்டமாய் ஓடி
உருட்டி விளையாடிய
சைக்கிள் டயர்கள்,
ஒட்டியிருந்த வயிற்றை
இன்று அவனில் தேடக்கூடும்!
கொழுப்பில்லாத
மெயின் ரோட்டு நீர் மோர் குவளைகள்
இன்று அவனது
சதைபிடித்த கன்னங்களைக் கிள்ளி,
எள்ளி நகையாடக் கூடும்!
அந்நாட்கள்,
அவனுக்கு பிடித்தவை,
சதைபிடிப்பு அற்றவை.
எதுவும் செய்யாமலே,
அவனுக்கு ஆறு பைகள் தந்து
ஆறுதல் சொன்னவை.
இன்று, ப
"இவன் வந்தால் சகதி, வராவிட்டால் அவதி"
என்று நாங்கள் சொல்லியதால்
கோபமா உனக்கு?
ஆயிரம் கரம் கொண்ட
சூரியனை காண்கின்றோம்
அனுதினமும்...
ஆயிரம் நீர்ச் சரம் கொண்ட நீ,
ஆடிகொருமுறை
ஏன் வருகிறாய்
எனத் தெரியாமல் கேட்டுவிட்டோம்!
மண்ணிடமிருந்து
வாசத்தை பிரித்துத் தரும்
அன்னபட்சி நான்! என
மார்தட்டிக் கொள்ள
வந்திருக்கலாம் நீ?
வசதி படைத்த மாந்தர்தம்
நலன் வினவ வந்த நீ,
அவர் மறுக்க,
அவர்களின் மகிழ்வுந்துகளின்
கண்ணாடிகளில்
பட்டுத் தெறித்த
கோபமா உனக்கு?
ஏழைக் குடிசைகளில்
அனுமதி என்றும் உனக்குண்டு
என்பதறிந்து,
கூரை வழியே புகுந்து
அவர்கட்கு
என்ன சொல்ல வந்தாய் நீ?
இன்னல