உதயன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : உதயன் |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 119 |
புள்ளி | : 20 |
சாதாரண மனிதன்
தொடு திரை வழியே
தொடாத சொந்தங்கள்
தொடருமா பேட்டரி முடிந்த பின்!!!
ஏன் நிட்கிறாய் நண்பனே ?
மழை ஓய்ந்து சொட்டு விழ
மண் குளிர்ச்சியை பிரதிபலிக்க
காற்று தென்றலாய் மாற
தேகம் சிலிர்க்க உயிர் படபடக்க
புரண்டோடும் இந்த உணர்ச்சி
காதலியின் வருகையால் சட்டென்று
மாற அவள் கண்பார்வை
இதை விட சொர்கமோ?
அரசாங்கம் இடித்தது
அத்து மீறிய பொறம்போக்கு இடத்தை!
மழை வெள்ளம் அழித்தது
அத்து மீறிய அதன்போக்கு வழியை!
இதில் யார் செய்தது குற்றம் ?
அரசாங்கம் இடித்தது
அத்து மீறிய பொறம்போக்கு இடத்தை!
மழை வெள்ளம் அழித்தது
அத்து மீறிய அதன்போக்கு வழியை!
இதில் யார் செய்தது குற்றம் ?
மழைக் காற்றில்
குலுங்கிக் குதித்துக்
குத்தாட்டம் போட்ட மரங்கள்
குளித்து முடித்து
சுத்தமாய் தலை உலர்ந்த
பூரிப்பில் ....
அமைதியாய் அழகாய்
அசைந்தாடின
பச்சை இலைகளில்
புன்னகை சுமந்தபடி !
மழைக் காற்றில்
குலுங்கிக் குதித்துக்
குத்தாட்டம் போட்ட மரங்கள்
குளித்து முடித்து
சுத்தமாய் தலை உலர்ந்த
பூரிப்பில் ....
அமைதியாய் அழகாய்
அசைந்தாடின
பச்சை இலைகளில்
புன்னகை சுமந்தபடி !
மூவாண்டு கடந்த பின்னும்
முத்து பற்கள் கண்டபோதும்
முதன் முதல் பார்த்த அந்த
முகம் மட்டும் நினைவிலடி!
தத்தி நடை பயின்று
எட்டி வைத்த பாதமன்றோ
சுத்தி சுழன்று வரும்
சுட்டி செய்யும் காலுமன்றோ!
கிள்ளை மொழியில் பேசிடுவாய்
செல்ல குறும்பும் செய்திடுவாய்
மெலிதாய் சினந்திட சிறு பொழுதும்
எளிதாய் சிரிப்பினில் வென்றிடுவாய்!
நுண்ணிய கேள்விகள் விளித்திடுவாய்
எண்ணிய யாவும் புரிந்திடுவாய்
விண்ணில் மீனாய் மிதந்திடுவாய்
வண்ண சிறகை விரித்திடுவாய்!
வஞ்சம் வெகுளி ஏதுமில்லை
நெஞ்சம் மொத்தம் அன்பின் அலை
பொய்மை கயமை அறிந்ததில்லை
வாய்மை மட்டும் உந்தன் நிலை!
தாயாய் நீயே சில நேரம்
என்னை மட
பார்வை ஒவ்வொன்றும் ஒவ்வொன்று சொல்ல
அது புரியாமல் என் பார்வை
பார்க்க மட்டும் சொல்ல
அவர்கள் பார்வையின் பின்னால் எண்ணங்கள் வேர்வேரயினும்
கண்கள் மட்டும் ஒரு புள்ளியில் குவிந்ததோ என் மீது...
பார்வை ஒவ்வொன்றும் ஒவ்வொன்று சொல்ல
அது புரியாமல் என் பார்வை
பார்க்க மட்டும் சொல்ல
அவர்கள் பார்வையின் பின்னால் எண்ணங்கள் வேர்வேரயினும்
கண்கள் மட்டும் ஒரு புள்ளியில் குவிந்ததோ என் மீது...
தமிழ்
ருசிக்க ருசிக்க திகட்டா அமுது
எப்படி பிறந்தாள் என அறியாது
மதுரை சங்கத்தால் தத்து எடுக்கப்பட்டு
வள்ளுவனால் வளர்க்கப்பட்டு
நக்கீரனால் நளினபட்டு
அவ்வையால் சீராக்கப்பட்டு
அகத்தியனால் பக்குவப்பட்டு
தேனினும் இனிதானவளை
அழிவில்லா தேவதையை
காணாத தாயை கண்டது போல்
உருவமில்லா மகிழ்ச்சி யடைந்தேன்
அந்நிய தேசத்தில் அந்நியன் ஒருவன்
தமிழ் பேச!