மரத்தின் புன்னகை

மழைக் காற்றில்
குலுங்கிக் குதித்துக்
குத்தாட்டம் போட்ட மரங்கள்
குளித்து முடித்து
சுத்தமாய் தலை உலர்ந்த
பூரிப்பில் ....
அமைதியாய் அழகாய்
அசைந்தாடின
பச்சை இலைகளில்
புன்னகை சுமந்தபடி !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (26-Nov-15, 6:55 pm)
Tanglish : maratthin punnakai
பார்வை : 112

மேலே