kayasamy - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : kayasamy |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 14-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 70 |
புள்ளி | : 2 |
ஆன்றோர் வாழ்த்துரைக்க
ஆயிரமாய் பூச்சொரிய
மங்கை திருமகளாய்
மணவறையில் காத்திருக்க
நாதசுர மேளங்கள்
நல்லதொரு வாழ்த்திசைக்க
நங்கை திருக்கழுத்தில்
நம்பி அவன் நாண்பூட்ட
கட்டியவன் கட்டழகை
கடைக்கண்கள் அளவெடுக்க
மெட்டியவன் பூட்டிவிட
மெல்லியலாள் முகம் சிவக்க
இவள் பாதியிவன் பாதி
என்றிணைந்திட்ட மணவாழ்வில்
இல்லறத்தின் இலக்கணமாய்
இரு மனமும் வாழியவே!
திருமணத்தின் இன்பங்கள்
திகட்டாது தொடர்ந்து வர
ஓருயிராய் ஆருயிராய்
மணமக்கள் வாழியவே!
''அம்மா இருந்திருந்தா நான் ஸ்டிக்கர் விக்க வந்திருக்க மாட்டேன்கா - கலங்கும் சிறுமி.
அன்று ஞாயிற்றுக்கிழமை. மின்சார ரயிலுக்காக எல்லோரின் கண்களும் வழித்தடத்தில் காத்திருக்க, என் கண்கள் அந்தச் சிறுமியையே பார்த்துக்கொண்டிருந்தது.
ஒரு கையில் மஞ்சள் பை; மற்றொரு கையில் விநாயகர், முருகர், ஏசுநாதர்,மெக்கா போன்ற கடவுள்களின் ஸ்டிக்கர்ஸ்.
அழுக்குப் பாவாடையும் பள்ளிச் சீருடை சட்டையையும் அணிந்திருந்தாள்.
ரயிலுக்காகக் காத்திருக்கும் ஒவ்வொருவரிடமும் சென்று, கையில் இருக்கும் ஸ்டிக்கர்களைக் காட்டுகிறாள். எல்லோரின் பார்வையும் சில நொடிகளில் அதை நிராகரிக்கிறது.
நம்பிக்கை தளராமல் அடுத்தடுத்து நகர
என்னுயிர் காதலனே
முடிவுகளில்லாத
முத்தமழை தருபவனே
உன் இதயத்தின்
அருகிலே எனக்களித்தாய்
சிறிய சிம்மாசனம்
அளவில்லாமல் எனக்கு
செலவழித்து
அளவுகடந்து காதலித்து
ஷாஜகானையே
மிஞ்சுவிட்டாய்
அவளில்லாமல் நானில்லை
பிரிக்க நினைத்த
பிறரிடமும்
பிரியாத சபதம்
செஞ்சுவிட்டாய்
இறுதிவரை உன்னோடு
பயணிக்க இயலாதவளாய்
உருகியே மரணித்தேன்
என்னால் நீயும்
இன்று உருகுகிறாய்
விரைவு மரணத்தையே
பெற இருக்கிறாய்
மீண்டும் சந்திப்போம்
இணைபிரியாத
மறுபிறப்பில்
இப்படிக்கு
அன்பு காதலி
சிகரெட்
ஏன் நிட்கிறாய் நண்பனே ?
மழை ஓய்ந்து சொட்டு விழ
மண் குளிர்ச்சியை பிரதிபலிக்க
காற்று தென்றலாய் மாற
தேகம் சிலிர்க்க உயிர் படபடக்க
புரண்டோடும் இந்த உணர்ச்சி
காதலியின் வருகையால் சட்டென்று
மாற அவள் கண்பார்வை
இதை விட சொர்கமோ?
...............................................................................................................................................................................
...............................................................................சீதைடா...
கல்லூரியில் படிக்கிறபோது என் நண்பர்களுக்கு வயசுக் கோளாறு போல நாடகம் போடுகிற கோளாறு
வந்து விட்டது. படிப்பு, பரீட்சை என்று மல்லு கட்டுகிற எங்களுக்கு நாடகம் நடத்துவது அவ்வளவு
சுலபமாயில்லை. இந்திய மாணவர் சங்கத்தில் சேர்ந்து முச்சந்தி கூடும் இடங்களில் தெரு நாடகம்
போடுவதென்றால் என் நண்பன் பழனியப்பனுக்கு அப்படி ஒரு ஈடுபாடு..
ஒரு அவசர கல்யாணம்
அதிகாலை மணி நான்கு.நான் துணிப்பையில் சில துணிமணிகளை திணித்துக் கொண்டிருந்தேன்.சுவற்றில் மாட்டியிருந்த என் குடும்ப புகைப்படத்தை கழற்றினேன்.ஒருமுறை ஏக்கத்தோடு அதை தடவிப் பார்த்தேன்.அப்புகைப்படத்தையும் துணிப்பையில் வைத்தேன்.
மெல்ல சத்தமில்லாமல் அம்மா அப்பாவின் படுக்கையறை கதவைத் திறந்தேன்.அப்பா குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.அம்மாவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.
இன்று நான் செய்யப்போகும் இந்த காரியத்திற்கு பிறகு அம்மா இனி எப்பொழுதுமே என்னிடம் பேசாமல் கூட போகலாம்.அம்மாவுக்கு இந்த காதலில் சிறிதும் விருப்பம் இல்லை.அவர் தன் பாசமலர் அண்ணனை தனக்கு சப்பந்தியாக்க
என் முதல் திருமணம்
முருகன் கோவில்.நான் பட்டாடை உடுத்தி மாப்பிள்ளையாய் அமர்ந்திருந்தேன்.என் முகத்தில் கொஞ்சமும் மாப்பிள்ளை கலை இல்லை.என் முகம் கடுகாய் வெடித்துக் கொண்டிருந்தது.
"டேய்.. மாப்பிள்ளை கொஞ்சம் சிரியேன்டா" அருகில் நின்றிருந்த என் நண்பன் கதிர் கிண்டலாய் சொன்னான்.என்னால் சிரிக்க முடியவில்லை.எனக்கு இப்படியொரு கல்யாணம் நடக்குமென்று நான் கனவிலும் நினைத்ததில்லை.
ஒரு போதும் இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கவே மாட்டேன் என்று இந்த கதிரிடம் சபதம் போட்டிருந்தேன். நான் தோற்று விட்டேன்.
என் அம்மாதான் இந்த திருமணத்தை செய்து முடிப்பதில் பிடிவாதமாய் இருந்தார்.எதிரே என் காதலி