யாரும் எழுதிறாத காதல் கவி

என்னுயிர் காதலனே
முடிவுகளில்லாத
முத்தமழை தருபவனே

உன் இதயத்தின்
அருகிலே எனக்களித்தாய்
சிறிய சிம்மாசனம்

அளவில்லாமல் எனக்கு
செலவழித்து
அளவுகடந்து காதலித்து
ஷாஜகானையே
மிஞ்சுவிட்டாய்

அவளில்லாமல் நானில்லை
பிரிக்க நினைத்த
பிறரிடமும்
பிரியாத சபதம்
செஞ்சுவிட்டாய்

இறுதிவரை உன்னோடு
பயணிக்க இயலாதவளாய்
உருகியே மரணித்தேன்

என்னால் நீயும்
இன்று உருகுகிறாய்
விரைவு மரணத்தையே
பெற இருக்கிறாய்

மீண்டும் சந்திப்போம்
இணைபிரியாத
மறுபிறப்பில்

இப்படிக்கு
அன்பு காதலி


சிகரெட்


Close (X)

0 (0)
  

மேலே