மங்கை திருமகளாய் மணவறையில் காத்திருக்க
ஆன்றோர் வாழ்த்துரைக்க
ஆயிரமாய் பூச்சொரிய
மங்கை திருமகளாய்
மணவறையில் காத்திருக்க
நாதசுர மேளங்கள்
நல்லதொரு வாழ்த்திசைக்க
நங்கை திருக்கழுத்தில்
நம்பி அவன் நாண்பூட்ட
கட்டியவன் கட்டழகை
கடைக்கண்கள் அளவெடுக்க
மெட்டியவன் பூட்டிவிட
மெல்லியலாள் முகம் சிவக்க
இவள் பாதியிவன் பாதி
என்றிணைந்திட்ட மணவாழ்வில்
இல்லறத்தின் இலக்கணமாய்
இரு மனமும் வாழியவே!
திருமணத்தின் இன்பங்கள்
திகட்டாது தொடர்ந்து வர
ஓருயிராய் ஆருயிராய்
மணமக்கள் வாழியவே!