சும்மா ஒரு கிறுக்கல்
இப்போதுதான்
மேகம் கர்ப்பமடைந்திருக்கும்.
என்ன அவசரமோ...?
சில மணிகளில்
பிரசவ வலி..!
உச்சம் பெறுகிறது
இடி மின்னலாய்..!!
அடேங்கப்பா..!
ஒரே பிரசவத்தில்
இத்தனை
கோடி கோடி
மழைத்துளிகளா....! ?
------------------------------------------------------------
போதும்டா சந்தோசு...! போதும்..!
-இரா.சந்தோஷ் குமார்