வருடல்கள்
சித்தம் சிறைப்பிடித்து
என் மொத்தம் களவுகொள்ள
நித்தம்நித்தம் நெருங்கிவந்து
முத்தமதை பகிர்ந்திடவே
என் கன்னம் வருடியே
எனை திண்ணமாய் திருடிடும்
என் ஆசை மீசையின்
மிகமென் வருடல்கள் !!
**************************************************************************
மார்போடு வாரியணைத்து
நின் மார்பின் சார்போடு
சுகமாய் சாய்ந்து
சொர்கமாய் சரணடைந்து
மதிப்புக்கூட்டு வரமாய்
நீ ஆரத்தழுவிடும்
வருடல்களை பெறுவதற்கு
ஆசையாய் நீ வளர்த்திடும்
நாய்குட்டியாய்,
பூச்சை குட்டியாய் (பூனை)
கூடுவிட்டு கூடுதாவ
கூடுமோவென நாடி
தேடி திரியுதென்
சிறு மனம் .....