பதியப்படாதவைகள் - 4
பதியப்படாதவைகள் -4
=====================
கற்பனைகள் அல்லாத
அனுயுத்தமாகும்
அகம்பிரசவிக்கும் கவிதையூற்று
என் கவிதைகள்
விலாசமற்று திரிந்தபோதும்
வார்த்தைகளுக்கு
மேற்கூரையாக இருந்திருந்தேன்
ஊர்ந்துபோன நீரோடையும்
காணாத கடுலாசுக்கூளங்களும்
நிகழ்ந்துமுடிந்த சம்பவங்களுக்கு
சாட்சியாக
இருந்திருக்கவில்லை அன்றெல்லாம்
ஓர்மையில் தொகைந்த
மெழுகுதிரியின் மணம்போல்
மீண்டும் நிறைந்து
பின் பிரிந்துபோனாலும்
பறித்தெறியமுடியாத மருவேற்றவாக்கு
என் பிரணயக்கவிதைகள்
அனுசரன்

