தவறுகள் - திருத்தங்கள்

புத்தி..
புரிந்து செய்ததோ..
புரியாமல் செய்ததோ..!

மனம்..
தெளிந்து செய்ததோ..
தெளியாமல் செய்ததோ..!

சூழ்நிலை...
அறிந்து செய்ததோ..
அறியாமல் செய்ததோ...!

தவறு தவறுதான்..
வேறு பெயரில்லை எனக்கு...!

காரணங்கள் இருக்கலாம்...
செய்த தவறுக்கான காரணங்கள் மட்டுமே...
காரணம் - என்றுமே தவறை சரியென மாற்றிவிடாது...
என் பெயரை மாற்றவும் நினைக்காதீர்கள்...!

தவறை சுட்டிக்காட்டுங்கள் - பெருந்தன்மையோடு
திருத்திக் கொள்வதற்காக மட்டுமல்ல...
மறுமுறை செய்யாமலிருக்கவும் தான்...!

தவறை மறைப்பதைவிட...
மன்னிப்பதைவிட...
திருத்துங்கள் - அதுவே
இந்த தவறுகளுக்கு தேவை...!

இதுவரை திருத்திய...
இப்பொழுதும் திருத்தும்..
இனியும் திருத்தப்போகும் அனைவருக்கும்
இந்த தவறின் சரியான நன்றிகள்....!!!

எழுதியவர் : மணிமேகலை (18-Aug-14, 6:15 pm)
பார்வை : 168

மேலே