பாவத்தின் சம்பளம்

பதில் சொல்வீர் தமிழ் மக்களே . . . . !
------------------------------------
எனக்கு இரண்டு சாவுகளை தெரியும்
ஒன்று மதுவருந்தி சாவது !
மற்றொன்று
மனம் வருந்தி சாவது !
இதில் முதலாவது இனிமை
மது அருந்துபவர்களுக்கு !
அடுத்தது கொடுமை
அனுபவித்தவர்களுக்கு !
தொன்னுரை கடந்த வயதில்
ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி
ஒவ்வொன்றிருக்கும் ஒரு சில பிள்ளைகள்
இன்று
அரசியலிலே
ஆயிரம் வளர்ச்சி
ஆதயாத்தில் அத்துனை கோடி !
இருந்தும் பயன் யென்ன ?
அண்ணன் தம்பி அதிகார சன்டை
அன்பான மகளோ
அலைவரிசை ஊழல் !
அடுத்த உழலில்
அன்பு மனைவி !
பேரன் செய்தது பெருந்தவறு
இப்படி எல்லாம் ஊழல் கயிற்றை
ஒரு முள கயிறாக
அரசு நீட்டுது !
அடியேனை பார்த்து !
நானோ
அஞ்சா நெஞ்சன்
அண்ணாவின் தம்பி என்பதே
இன்றும்
அகிலம் நம்புது !
தள்ளாத வயதில்
தொல்லைகளோடு வாழ்வது இனிமையா ?
தவறா சரியா ?
தமிழ் மக்களே நீங்கள் சொல்லுங்கள் !
இதுதான் பாவத்தின் தண்டனையா ?
பராசக்திக்கு வசனம் எழுதிய
இந்த பாவிக்கு புரியவில்லை !
பதில் சொல்வீர் . . . !

எழுதியவர் : (19-Aug-14, 1:49 pm)
சேர்த்தது : m arun
பார்வை : 71

மேலே