அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
அழகான வாழ்க்கை ஆனந்தமாய் தொடர
==அமைந்தவளை என்றும் அன்போடு நடத்து
குழந்தைகள் பெற்றுக் கொடுப்பதற்கு மட்டும்
==கொண்டவளைக் கொள்ளுங் குணந்தன்னை மாற்று
பழகாமல் பார்த்துப் பேசாமல் வாழ்வின்
==பரிசாக வந்த பந்தத்தைப் போற்று
பழங்கால மக்கள் பண்பாட்டை எடுத்து
==பழத்தோடு பாலாய் பசியாற ஊட்டு
ஊரெங்கும் சுற்றி உழல்கின்ற நீயும்
==உட்கார்ந்து சற்று இளைப்பாற வேண்டின்
நீருண்ட மரமாய் நிழல்கொண்டு நிற்கும்
==நினதன்புத் துணையே நிலையானக் காதல்
தேரேற்றி வைத்துத் தினந்தோரு முன்னை
== தென்றலெனும் காற்றாய் தாலாட்டி வைப்பாள்.
வேரோடு பிடுங்கும் விலைமாதாய் அன்றி
==வேராகித் தாங்கும் விருட்சமெனக் கொள் நீ!
தன்னலங்க ளில்லாதத் தலைவியென் றாகித்
==தன்குடும்பம் என்றே தலைசுமந்த்து கொண்டு
உன்னைச்சேர் பந்தம் ஒவ்வொன்றாய் பார்த்து
==உன்னிப்பாய் அவரின் உணர்வுகளை மதித்து
என்னவரின் உதிரம் என்றெண்ணித் தன்னை
==எதிர்நோக்கும் இன்னல் எதுவென்ற போதும்
அன்னமெனப் பால்நீர் பிரித்தறிந்து ஊட்டும்
==அம்சமுள்ள தாரம் அன்பினஸ்தி வாரம்
குடும்பத்தில் புகுந்து குலவிளக்கை ஏற்றி
==குவிந்தஇருள கற்றி குளிர்நிலவாய் ஜொலித்து
இடுக்கண்கள் நீக்கி இல்லத்தை மாற்றும்
==இயல்பாலே வாழ்வில் எதிர்வந்தப் புயலின்
உடும்புக்கை ஒடித்து உயிர்வாழ்வின் சிறப்பை
==உலர்ந்திட்ட விதைதான் விழுந்திட்ட நிலம்மேல
விடுகின்ற வேரில் மண்பற்றி எழும்பும்
==விருட்சம்போல் படர உரமூட்டு வாளே!
வீட்டுக்குள் நின்று விளையாடும் அன்பு
==வெளிசெல்லு முந்தன் விழியாகி நின்று
காட்டுகின்றப் பாதை கால்வைத்துச் செல்லக்
==காத்திருக்கும் வெற்றி கைகளிலே சேர்ந்து
நாட்டுக்கே நீயும் வழிகாட்டி யாக
==நாளைக்குத் திகழ இருக்கின்ற தற்காய்
ஆட்டத்தை தொடக்கி வைத்தவளைப் போற்ற
==அழகான வாழ்க்கை ஆனந்தமாய் கூடும்!
*மெய்யன் நடராஜ் (போட்டிக் கவிதை)

