Proud to be an Engineer

கல்லுரியில்
எங்களிடம் பேசிய பெண்கள் சில பேர்!

எங்களால் பேசப்பட்ட பெண்கள்
பலர் பேர்!

இயந்திரத்தின் சப்தம்
நாங்கள் இசைந்து கேட்கும் சங்கீதம்!!

அழுக்கு அழகை கெடுக்கும் என்பர்கள்
எங்களுக்கு அழகே அழுக்கு தான்!!

ஆசிரியர்களில்
எங்களை திருத்த வந்தவர்கள் எல்லாம்

எங்களை பார்த்து திருந்திவிடுவார்கள்!!

படுக்கை அறையில் உறங்கியதை விட
பரிட்சை அறையில் உறங்கிய நாட்கள் அதிகம்!!

நாங்கள் கொஞ்சம் வித்தியாசம் தான்!
வகுப்பறைக்கு வெளியே இருப்பதை விட
உள்ளே இருப்பது வெட்கம் என சொல்வோம்!!

நாங்கள் கொஞ்சம் வித்தியாசம் தான்!!

தேர்வுக்கு முன் இறைவனை வேண்டி கொள்வோம்!!

தேர்ச்சி பெற அல்ல!
தினமும் pen வாங்கிட
பக்கத்தில் ஒரு பெண் அமர வேண்டும் என்று!

நாங்கள் கொஞ்சம் வித்தியாசம் தான்!
தேர்வில் வெற்றி பெற்றால் வேதணை கொள்வோம்!!
தோல்வியுற்றால்
சாதணை என்று சொல்வோம்!!

நாங்கள் கொஞ்சம் வித்தியாசம் தான்!
தேர்வு வைத்த ஆசிரியருக்கே தேர்வு வைப்போம்,
விடைதாளில் வினாவை மட்டும் எழதி!!!

எங்களுக்கு எதிரிகள் யாரும் இல்லை
P.K.NAG ஐயும் , R.S Kurumi ஐயும் தவிர

எங்கள் அடையாளம் நீல ஆடை-
அதில் நிறைந்து இருக்கும் கிரிஸ் வாடை

எங்களுக்கு இயந்திரத்தின் மேல் கூட பாசம்!
எப்போதும் எங்கள் மீது விசும் ஆயில் வாசம்!

நான்கு ஆண்டுகளும் கல்வியிலும் சரி
கல்லூரி போட்டியிலும் சரி
முதல் இடம் எப்போதும் எங்களிடம்!!!

இயந்திரம் இல்லா உலகம் வெறுமை!!
என்பதால் இயந்திரவியல் (mech) என்று
சொல்வதில் எங்களுக்கு பெருமை!!

குண்டு ஊசி முதல்
மலை குடையும் இயந்திரம் என நிலம், நீர், வானம் என
எங்கும் இயந்திரம்

இதுவே இவ்வுலகை இயக்கும் மந்திரம்!!!
சர்வமும் நாங்கள் தான் என்பதால்
கொஞ்சம் கர்வம் எங்களுக்கு எங்கள் மேலே!!!

பெருமை கொள்ள உரிமை கொண்டுள்ளோம்...

Mechanical Guys Rockzzz... Always...

Engineers ...::P:P
Ur Feed Back Pls...............!

எழுதியவர் : (1-Sep-14, 2:35 pm)
சேர்த்தது : ர த க
பார்வை : 190

மேலே