வரிக்கவிதைப் பெயர்கள்
வரிக்கவிதைப் பெயர்கள்
மூன்றுவரிக் கவிதைகளை
ஆயிரக்கணக்கில் எழுதினாலும்
அவ்வகைக் கவிதைக்கெல்லாம்
முத்தான தலைப்பு ஒன்று ஹைக்கூதான்.
ஜப்பானியக் குறும்பாவை
தமிழில் வடிக்கும் கவிஞர்கள்
குறும்பாவின் மையக்கருவை
தலைப்பாகக் கொடுக்க
தடுமாற்றம் கொள்கிறார்!
மூன்று வரியென்ன பத்துவரிவரையும்
புதுப்புது பாவடிக்க பெயர்கள்பல சமைப்போம்:
ஒருவரிக் கவிதை ஒருக்கூ
இரண்டுவரிக் கவிதை இரக்கூ
மூன்றுவரிக் கவிதை மூன்க்கூ
நான்குவரிக் கவிதை நான்க்கூ
ஐந்துவரிக் கவிதை அய்ந்க்கூ
ஆறுவரிக் கவிதை ஆற்க்கூ
ஏழுவரிக் கவிதை ஏழ்க்கூ
எட்டுவரிக் கவிதை எட்க்கூ
ஒன்பது வரிக்கவிதை ஒன்க்கூ
பத்துவரிக் கவிதைப் பத்க்கூ.
மையக் கருத்தெல்லாம்
தலைப்பாக வேண்டுமா?
க்கூவென்று முடியும் தலைப்பே
எக்கவிதைக்கும் பொருந்தும்!
ஈஅடிச்சான் காப்பிக்கு
இயல்பான வரவேற்பு?
மையக்கருத் தலைப்பெல்லாம்
கவிதைக்குத் தேவையில்லை.

