பிடிக்கவில்லை

புகைப்பது பிடிக்கவில்லை...

நகைப்பது பிடிக்கவில்லை...

பொய் உரைப்பது பிடிக்கவில்லை...

நீ முறைப்பது பிடிக்கவில்லை...

உன் ரசனை பிடிக்கவில்லை...

உடை, நடை பிடிக்கவில்லை,

உரைநடையும் பிடிக்கவில்லை...

தலைவாருவது பிடிக்கவில்லை...

உன் நண்பனுடன் சேருவது பிடிக்கவில்லை...

இப்படி எத்தனையோ உன் பிடிக்கவில்லைகளை.,
எனக்கு பிடித்திருந்தும்...
விட்டுவிட்டேன்...

என் சுய சுகங்களை விற்றுவிட்டேன்...

உன் சிரிப்பில் மட்டும் சுகம் கண்டேன்...

இதுவே போதும் என்று இறுக்கம் கொண்டேன்...

இனியவளே...

முன்பே தெரியவில்லையடி...

உன் பிடிக்கவில்லை பட்டியலில்...
இறுதியாய் நானும் சேருவேன் என்று...!

எழுதியவர் : கெளதம் (18-Sep-14, 4:06 am)
சேர்த்தது : கௌதமன்
Tanglish : pidikkavillai
பார்வை : 376

மேலே