மரம் என்பது - உணர்வுகள் நிறைந்த மானுடம்

வேர்களில்
விழுந்து
வணங்கினேன்.......
மரம் அது
கைகளை நீட்டி
ஆசிர்வதிப்பதாய்
நீண்டிருந்தது கிளைகள்........
சுபிட்சமாய் இரு என்று என்னை
ஆசிர்வதிக்கும் சொற்களாய்
இதோ இந்த நிழல்கள்......
எனவே தோழமைகளே.....
தயவு செய்து
மரங்களை வெட்டாதீர்கள்.....
அவர்கள்
அனைத்தையும் உணர்ந்த
அறிஞர் பெருமக்கள்.......!!