விநோத விலங்கின் மரணம்- சந்தோஷ்
இது ஒரு விநோத விலங்கு.
மனித இனத்தின்
இருதயத்தை கொண்டது.
மிருக இனத்தின்
ஆக்ரோஷ குணமுடையது.
இது எப்போதும்
முப்பொழுதும்
தேடுவது
அன்பு அன்பு
அன்பு மட்டுமே.
மனித இருதயம் படைத்த
இந்த மிருகத்திற்கு
மனித உருவிலுள்ள
ஒரு மனுஷியுடன்
ஓர் உறவு உண்டாம்.
அந்த உறவு
என்பது...
உற்ற காதலியா ?
நெருங்கிய தோழியா?
அல்ல அல்ல
அது அது
காதலியையும்
தோழியையும்
மிஞ்சிடும் உறவு.
அந்த உறவு
இந்த
மானிடப் பிறவிகளுக்கு
புரிந்திடாத
புலப்படாத
பொய் இல்லா கவிதை...!
இந்த மானிடப்பிறவிகளின்
இருதயத்தில் இல்லாத
இந்த விநோதபாசம் என்பது...
ஆழிப்பேரலையாய் பொங்கும்
செந்தமிழாய் இனிக்கும்
அன்னைமடியாய் தாங்கும்
இப்படிப்பட்ட
இப்படிப்பட்ட
மென்மை இருதயத்திலிருக்கும்
இவ்விலங்கின் அன்பு- அவளின்
பெண்மை இருதயத்திற்கு
விளங்கவில்லை போல...!
அன்பு என்றும்
பாசம் என்றும்
கோரத்தாண்டவமிடும் இந்த
கொடூர மிருகத்திற்கு
மானிட கவிஞனைப்போல
நயவஞ்சகமையில்
எழுதிடதெரியவில்லை போல..!
வேடதாரிகளின்
பல்லிளிப்புக்களையும்
மொழிப்பிதற்றும்
சில சில்லரைவாதிகளின்
கவிதை வரிகளையும்
அன்பு என்று நம்புகிறதாம்
இந்த பாவப்பட்ட மனிதயினம்.
விரக்கதியடைந்த
விநோத விலங்கு............
இதோ இதோ
பறவையாய் உருமாறுகிறது.
மண்ணுக்குள் சமாதியாகி
விண்ணுக்கு செல்ல
சிறகை தயார்படுத்துகிறது
------------------------------------------
என்னைப் போன்ற
அப்பாவி மிருகமே!
இங்கே மரணித்து
அங்கே சென்றுவிடு...!
இதோ ! நானும்
சிறகை வளர்த்துக்கொண்டு
வந்துவிடுகிறேன்.
உன்னோடு...!
அன்போடு....!
-------------------------------------------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.

