குன்றுமீதமர் சாரல், அது முகிலின் காதல்
ஓங்கி வளர்ந்தொயிலாய்
வான்விரிப்பைத் தாங்கிநிற்கும்
நீல வெழில்முகத்தோன்
மார்பதனில் தேங்கிநிற்கும்
தேவி நிலமடந்தை
மேலுதித்த மலைமகவின்
மூக்குநுனி நீவவரும்
காற்றதுவின் போக்கதனை
போகும் போக்கினிலே
நாக்குநுனித் தேன்துளியாம் நீர்த்துளியால்
கன்னிமழைப் பெய்யாமல்
காத்திருக்கும் கன்னிமுகில்
காதலுடன் சொல்வாளடி!!
- சுந்தரேசன் புருஷோத்தமன்