ஆகாய பொற்றாமரை

வெள்ளி பனிபோர்த்த நெடீய மலைத் தொடர்
அதன் மேல் படர்ந்த தெளிந்த நீல வானம்
மலர்ந்த அந்திச் செம்பொன் கதிரவன் , நோக்கின்
ஆலவாயான் வெள்ளியம்பல பொற்றாமரை புனலோ !
ஆகாய காட்சி கண்டதும் பொங்கும் கவிதை என்பதால்
இதுவும் தமிழுக்கு சான்றுரைத்த பொற்றாமரை புனலே .