சிரிப்பு

காரணமின்றி யாரேனும் சிரித்தால்
கோபம்
எல்லைமீறும்.
நம்மைதான் நக்கல் செய்து சிரிக்கிறார்கள் என்றால்.?
குருதியும் வியர்வையும் மூக்கு நுனியில்
வந்து போருக்கு தயாராகும்.
ஆனால்....
இங்கு நீ என்னை பார்த்து சிரிக்கிறாய்,
நக்கலாகதான் சிரிக்கிறாய்,
ஆனால் கோபம் வரவில்லை.
பொறாமை கலந்த வேதனைதான்
என் உணர்சிகளின் வரிசையில்
முதல் இடத்தில் நிற்கிறது.
காரணம்????
கவலைகளை சுமக்கும்
மனிதபிறவி எடுத்துவிட்டதற்காக.
நீ சிரி. நல்லா சிரி.
ஹா ஹா ஹா அஹ-பூனை.