இரவில் வானமும் பூமியும்
கதிரவன் வானில் வண்ண ஜாலம்
பண்ண வானமும் ஆனது
செவ்வானம்
நாரைகளும் கொக்குகளும் வானில்
சிறகடித்துப் பறக்க கோலத்திற்கு
வைத்த புள்ளி அசைவது போல்
மாயம் காட்டியது
தாமரைக்கு சிறு வருத்தம்
கதிரவன் தன முகம் பார்க்க
நாளை காலை வரை காத்திருப்பதில்
சூரிய காந்திக்கு பெரும் வருத்தம்
இன்றும் கதிரவன் தன முகம்
பார்க்கவில்லை என்று
ஒளியின் ஆட்சி விலக
இருளின் ஆட்சி தொடங்க
வானமும் ஆனது கரும்வானம்
நீக்ரோ பெண்ணின் முகத்தில்
வெள்ளைப் போட்டும் இடையிடையே
பருக்களும் போல் இரவு வானம்
வெள்ளைப் பொட்டின் வெண்மை ஒளி
பூமிக்கு ஒளியை பரப்ப
சில்வண்டின் சத்தமும்
கடல் அலையின் இரைச்சலும்
தென்னோலை சரசரப்பும்
பூலோகத்தில் இசைக்கச்சேரி
வெள்ளைப் பொட்டின் மேல் காற்று
வீசியதில் கலையப்பட்ட கூந்தல்
வந்து விழுந்தது போல் கரும் மேகம்
ஆனாலோ இசைக்கச்சேரிக்கு
தடையேதுமில்லை
காற்றுக்கு பொறுக்கவில்லையோ
என்னவோ ?கரும்மேகத்தை
தள்ளி விட்டு வந்தது
மீண்டும் வெள்ளைப் பொட்டின்
ஒளி பூமியில் பரவ
எங்கோ இருந்து நரியின் ஊளை
அதனுடன் ஆந்தையின் முணுமுணுப்பு
இசைகச்சேரியின் புதிய அங்கம்
ஆரம்பம் ...........