சின்னச் சின்ன பையா வா
சின்னச் சின்ன பையா வா!
இறைவன் பெயர் சொல்லி நீ
பொம்மை வைத்து விளையாடு!
பகல் நெடிய ஒளியுடன் இருக்கிறது,
வானில் சூரிய ஒளியும் இருக்கிறது!
விரைந்து வா பையா மழையைப் பார்,
மேகம் திரண்ட வானத்தை மீண்டும் பார்,
நீ சண்டையிடாதே! அன்பு கொள் மிகவே,
சரியான வழியில் வேலையைச் செய்
எப்பொழுதும்!
நாய்கள் குரைக்கும்போது அஞ்சாதே!
விண்மின்கள் மின்னும்போது களிப்புடன்
நடனம் செய்; தந்தை தாயிடம் அன்பு கொள்!
அவர்களுக்கு நல்லதைச் செய்து
நல்லவனென்று நீ பேர் எடுப்பாய் !
ஒவ்வொரு நாளும் இறைவனை அழை!
அனுதினமும் அவன் முன் தலைவணங்கு!
பூமி என்ற இப்பூங்காவில் நீ ஒரு
எழுச்சி தரும் தாரகைதான்; நல்லவன்
என மதிப்புறவே எண்ணம் கொள்!
இறுக்கம் தளர்த்தி ஆசுவாசப்படு!
ஓ' என்னன்பே வா வா! பட்டம் பறக்கவிடு!
நம் உடலோ மண்ணால் செய்யப்பட பொம்மை!
சின்னச் சின்ன பையா வா!
சிரித்து சிரித்து நீ விளையாடு!
'ஒடிசா'வில் சிறுவர்களுக்காக எழுதப்பட்ட பாடல்.
உலகிலுள்ள சிறுவர்களுக்கு சமர்ப்பணம்.