இன்பம் எங்கே
![](https://eluthu.com/images/loading.gif)
வீட்டினில் இன்பம் எதனாலே?
வேள்விகள் ஜெயிப்பதும் யாராலே?
ஊரினில் உள்ள உறவெல்லாம்
உம்மை மதிப்பது எதனாலே?
பேரிடி ஏதும் வந்தாலே
பேதை மனைவியின் துணையாலே
பெரிதாய் தோல்விகள் கிடையாதே!
பெண்ணை மதித்து வாழ்வீரே!
அடிமை புழுவென நடத்துவதால்
ஆனந்தம் பெறுவது நடக்காதே!
அன்பினைத் தவிர எதனாலும்
ஆளுதல் என்பது முடியாதே!
கூட்டல் கழித்தல் கணக்காலே
குடும்பத்தில் இன்பம் பெருக்குதலே
இயலாதென்பதை அறிந்தாலே
இல்லறம் சிறக்கும் தன்னாலே!