புரட்சியவாதி

புரட்சியவாதி
நின் ஏழ்மை கண்டு பொங்கினால்- ஐயோ!
நான் வினவப்பட்டேன் புரட்சியவாதிஎன்று! நின் சிறுமை கண்டு பொங்கினால் -ஐயோ!
நான் வினவப்பட்டேன் புரட்சியவாதிஎன்று! நின் மடமை கண்டு பொங்கினால்-ஐயோ!
நான் வினவப்பட்டேன் புரட்சியவாதிஎன்று!
நின் கொடுமை கண்டு பொங்கினால்-ஐயோ!
நான் வினவப்பட்டேன் புரட்சியவாதிஎன்று! நீ ஏமாறுவது கண்டு நான் கோபமுற்றால்
நான் வினவப்பட்டேன் புரட்சியவாதிஎன்று!
நின்! ஏழ்மையும்,சிறுமையும்,மடமையும்....
கொடுமையும்,ஏமாற்றமும்,வீழ்ச்சியும்... உனக்கு மட்டும்தானா? என நான் கேட்டால்,
ஐயோ!வினவப்பட்டேன் புரட்சியவாதிஎன்று!
நீ படும் வேதனைகண்டு இரக்கமுற்றால்-என்
இரக்கமெனும் வேதனைமட்டும் -அதை உன்னிடமிருந்து பறிக்காதென்றால்-இப்போது
நீ வினவ வேண்டாம் புரட்சியவாதியா?என்று
நானே உரைக்கிறேன் ...நானே உரைக்கிறேன்...
நான் புரட்சியவாதி...புரட்சியவாதி...புரட்சியவாதி

எழுதியவர் : பாபு பகத் (12-Oct-14, 9:51 pm)
பார்வை : 92

மேலே