நண்பனே

உலகறியா என் விம்மல் அழுகையை நீ அறிந்தாய்..

அசட்டான என் விக்கல் சிரிப்பினையும் இறைந்தாய்...





எனை எவர் ஏசினாலும் கோவக்கண் சிவந்தாய்..

நல்லவன் எனச்சொல்லி எனை எள்ளி நகைந்தாய்..




உடையவளும் உரைக்காத இரகசியங்கள் பகிர்ந்தாய்...

சிறுபிள்ளைத் தனமாய் வாய் வாதங்களும் புரிந்தாய்...




கால் கடுக்கும் தூரம் கூட கைகோர்த்து நடந்தாய்...

ஊர் சேரா வழி தனிலே தடைக்கல்லாய் கிடந்தாய்...




பணப் பாம்பின் விடம் தீண்டா வித்தகனாய் இருந்தாய்..

கனம்சேரும் மனப்பாறை உடைத்தின்ப நீர் சுரந்தாய்..




உற்றவன் நான் எனக்கூறி உலகத்தை மறந்தாய்..

இரத்த பந்தம் மட்டும்தான் இல்லை-இருந்தும்

உனை ஈன்றவளும் என் தாய்...

எழுதியவர் : கருனபாலன் (14-Oct-14, 11:22 am)
Tanglish : nanbane
பார்வை : 150

மேலே