சுகமான நினைவுகள்
விழி அருகே கனவிருந்தும்!
நெஞ்சருகே நினைவிருந்தும் !
இதழ் அருகே தேன் இருந்தும் !
பார்க்காது,நிஜம் காணாது,பருகாது வாழ்கிறேன்....
இப்போது சிறு காற்று கூட தென்றலாய்!
ஓடும் ஆறு கூட, நாம் கால்நனைக்கும் நீரோடையாய்!
இருள் சூழ்ந்த பொழுது கூட சுகமாய் உணர்ந்தேன்...
உன் நினைவினால் மட்டுமே !
ஆயிரம் நினைவுகள் விழி அருகே !
நீ மட்டும் என் உயிர் அருகே !
விழி அருகே தோன்றும் நினைவுகள் எல்லாம்
அதிகாலை தோன்றி மறையும் பனித்துளி போல!
என் உயிர்அருகே தோன்றிய உன் நினைவு மட்டும்,
இன்றும்,என்றும் அழியாத சுவடுகளாய்!
என்னை விட்டு நீங்காது வாழும்!
நினைவுகளும்,நிஜங்களும் ஒன்றென்று
அறிந்தேன் !
உன்னைப் பார்த்த பிறகு """"
நிஜங்களைவிட நினைவுகள் கூட
சுகமென்று உணர்ந்தேன்!
நீ என் உயிருனுள் வந்த பிறகு.
பொழுதுகள் கூட பல யுகமாய் உணர்ந்தேன்!
உன்னை பிரிந்து வாழும் போது.
பொழுதுகள் நம்மை தொலைவில்
வாழச் செய்தாலும்.
நீங்காத நினைவுகள்! மட்டுமே நம்மை உயிரோடு வாழச் செய்தது.
இனிமேல் நலத்தை உணர நினைவுகள்!போதும்.
உள்ளத்தை உணர்த்தும் நினைவுகள் என்றும் நீங்காது வாழும்!
"வாழும் நினைவுகள் தான் "
நம் உயிரின் அடையாளம்....
உணர்வுகளோட கீர்த்தனம்.....
மௌனத்தின் உயிர் மூச்சு......
சுவாசிப்போம் சுகமான நினைவுகளை !
நேசிப்போம் நீங்காத அதன் சுவடுகளை !