பெண்ணே நீயும் தாயாவாய்

உறவுகள் ஆயிரம்
உதிரி பூக்களாய் ...
உணரும் மனதால்
மாலையாக மாறி
சிலநேரம் பூஜைக்கும்
சிலநேரம் கல்லறைக்கும்...!

எல்லா உயிருக்கும்
மேன்மையான உறவு அம்மா !
மென்மையாய் ...
பெண்மையாய் இருப்பதாலே !

பெண்மைக்கு பிடிக்காத
உறவென்றால் அம்மா !
அவள் அம்மா அல்ல
அவன் அம்மா ...!

புரிந்தும் புரியாத பெண்மை
பாசப் போராட்டத்தின் சூழ்ச்சி !
தன் தாயென்றால் வரும் பரிவு
தாலி தந்தவன் தாய் கண்டால் பிரிவு !

எழுதியவர் : கனகரத்தினம் (16-Oct-14, 10:28 pm)
பார்வை : 177

மேலே