மதிய உணவு

காலை 8.12 மணி மின் வண்டியை
தினமும் தவற விடுகிறேன்,
அவசர அவசரமாய் அம்மா சமைக்கும்
என் மதிய உணவை எடுத்து செல்ல....
என் மீதான அவள் அக்கறையோடு
பேருந்தில் பயணிக்கிறது, நேரத்திற்கு
செல்ல நினைக்கும் என் கடமை உணர்வு....