கரம் தொடத் துடிக்கும் இரண்டாம் காதல்

அவளின் நினைவுக்கடலினில் மூழ்கி மூச்சுத் திணறுகிறேன்..
தொட்டு விடும் தூரதிலே கரை தெரிகிறது...
கரையில் என் கரம் பற்றி காக்க நீ காத்திருக்கிறாய்..

அலை பாயும் உன் கண்களின் தேடல்
உச்சந்தலையில் மின்சாரம் பாய்ச்சி என்னை உயிர்ப்பித்தது..

புத்துயிர் பெற்று
உன் மடி சேர
உன் திசை நோக்கி
விரைகிறேன்..

விதியுடன் மோதி
தளைகளை விலக்கி
அலைகளைக் கலைத்து
நகர்கிறேன்..

செவிகளில் நுழைந்து
என் சிந்தையைக் கலைத்தது
ஒரு வினோதமான ஒலி...


ஒலியின் திசையில் என்
விழிகளை செலுத்தினேன்..

என்ன சத்தம் அது?
பன்முறை கேட்டுப் பழகிய உணர்ச்சி..
மனதினில் ஏதோ புரியாத தளர்ச்சி..

உற்றுப் பார்த்தேன்..
மீண்டும் அவள்.. அவளே தான்..

இல்லை அவள் சென்று நெடு நாட்கள் ஆகிறதே..
யார் அது? யார் அது?
என் நினைவுகளில் பதிந்த அவளது பிம்பம் தான் அது..

கரை தொட விழைந்து கரம் நீட்டிய நொடியில்
மனதினில் நுழைந்து சிரம் தொட்டிழுக்கிராள்..

அவள் குடித்து வைத்த மிச்ச உயிரையும்
அவள் நினைவுகள் குடிக்கத் துடிக்கிறதே..

உன்னைப் பார்க்கிறேன்..
கரை நின்று நீ கொடுத்த மின்சாரம் வேலை செய்கிறது..
அவளை உதறி உன்னை நோக்கி வேகமெடுக்கிறது என் உடல்..
உன்னிடம் வருகிறேன்..

என் உடலைப் பற்றி அவளது நினைவுகளுக்குள் இழுக்கிறாள்..
உதறி உன்னை நோக்கி வருகிறேன்..

மீண்டும் பிடித்து இழுக்கிறாள்..
உதறி உன்னை நோக்கி விரைகிறேன்..

அவள் சென்று விட்டாளும்
அவளின் நினைவுகள் என் உயிரைக் குடிக்கத் துடிக்கிறதே..

விதியின் மீது எனக்கு என்றும் நம்பிக்கை இருந்த்தில்லை..
உன் அன்பின் மீது கொண்ட நம்பிக்கையே எனக்கு பலம் தருகிறது..

மக்கிப் போன என் மனத்தை
அன்பினால் சுத்தம் செய்யக் காத்திருக்கும்
உன் காதலின் மீது சத்தியம்..

இப்போரட்டத்தை வென்று
அவள் நினைவைக் கொன்று
விரைவில் உன் கரம் பிடிப்பேன்...

எழுதியவர் : கு. கோகுல் (17-Oct-14, 8:08 pm)
பார்வை : 290

மேலே