கவிஞர் கண்ணதாசன்
அன்று தொட்டு இன்று வரை
அவனேதான் கவிஞன்
எல்லோர் மனதிலும் வாழ்கின்ற கவிஞன்
சோகத்தில் சுகம் கொடுக்கும் கவிஞன்
சொர்க்கத்தில் விளையாடும் கவிஞன்
கன்னியர்க்கும் காளையர்க்கும் காதலின் கவிஞன்
பெற்றவரின் நன் மதிப்பை போற்றிவந்த கவிஞன்
நண்பன் என்றால் நம்பிக்கை உணர்த்தி வந்த கவிஞன்
இன்பம் என்றால் இது என்றும்
இனிமை என்றால் இது என்றும்
அன்புக்கும் ஆசைக்கும் நட்புக்கும்
கவிகளிலே கருத்து அமைத்து
பண்பினிலே இசை அமைத்து
பாரெங்கும் புகழ் சேர்த்த பாசமுள்ள கவிஞன் அவன்
வாழ்வில் சுகம் காண என்றும் பதினாறு
வாலிபனாய் வாழ்ந்து தத்துவங்கள் பல சொல்லி
எம்மை எல்லாம் நெகிழ வைத்த செம்மல் அவன்
தித்திக்கும் அவன் குரலே சிம்மக்குரல்
இன்பம் இனிமை காதல் காமம் எதுவும்
அவன் பாடலுக்குள் சங்கமம் ஆகிவிடும்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவன் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
இதை எழுதிய தத்துவ மேதையும் இவனே
இவனே நம் அன்புள்ள கவிஞன் கண்ணதாசன்
கண்ணதாசன் படைப்பு பாடல்கள்
கேட்டிடத் துடிக்கும் நெஞ்சங்கள் பலகோடி
கண்ணதாசன் போல் கவிஞன் ஒருவன்
பிறந்ததும் இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை
கண்ணதாசன் புகழ் என்றும் மறையாது
கவிஞன் என்றால்முதலில்
நினைவில் வருவது கவிஞர் கண்ணதாசனே
என்றென்றும் நிலைக்கும் அவர் புகழே

