நெஞ்சினிலே Episode 11
நெஞ்சினிலே.......
( Still I Love You ) தொடர் கதை Episode 11
சில நாட்கள் கழித்து மீண்டும் ராதா பாடசாலை சென்றாள். ரவி அவளிடம் போய் என்னவென்று விசாரித்தான். ராதா நடந்தவற்றை கூறினாள்.
ரவி : " Sorry என்னாலதான இப்படி Sorry டா "
ராதா : " பரவாஇல்ல விடுங்க "
ராதாவின் அம்மா பாடசாலை மட்டும் தான் அனுப்பினால் இதனால் பாடசாலை முடிந்து மட்டுமே இருவரும் பேசிகொள்வார்கள். இப்படி சில காலம் சென்றன.
ஒரு நாள் ரவி வீட்டில் தூங்கி கொண்டிருந்தான் காலை 8.30 மணி இருக்கும். திடிரென அவனுடைய தங்கை ரமணி,
ரமணி : " அண்ணா அண்ணா "
ரவி : " என்ன? "
ரமணி : " ராதா அக்கா வந்துட்டு போறாங்க "
உடனே எழுந்து வந்து பார்த்து காணவில்லை. Cap ஐ எடுத்து மாட்டிக்கொண்டு Bike ஐ எடுக்க வந்தான் அப்பதான் சர்வீஸ் பண்ணி வைத்து இருந்தது. வெளியே வந்து ஓடி போனான் வீட்டின் அருகில் உள்ள கடையில் ரவியுடைய நண்பர்கள் நின்றனர். அதில் ஒருவன்,
நண்பன் 1 : " மச்சான் இப்பதாண்டா நம்மட தங்கச்சி போச்சி "
ரவி : " தங்கச்சியா? "
நண்பன் 2 : " உன்னட Lover தான் "
அந்த நேரம் மற்ற நண்பன் பைக்கில் வந்தான் அதை வாங்கி கொண்டு சென்றான் ராதா போய் கொண்டிருந்தாள். அருகில் சென்றான்.
ரவி : " எங்கங்க போறிங்க? "
ராதா : " Friend வீட்டுக்கு போறங்க "
இப்படியே கொஞ்ச தூரம் பேசிக்கொண்டு சென்றனர். நண்பியின் வீடு நெருங்கியதும்,
ராதா : " 2.30 மணிக்கு வாங்க "
ரவி : " ம்ம்ம்ம்ம் "
சொல்லிவிட்டு சென்றான்.
1.00 மணி அளவில் ரவியுடைய போன்க்கு Call வந்தது.
ரவி : " ஹலோ யாரு "
ராதா : " நான்தாங்க "
ரவி : " என்னகங்க யாருடா போன்? "
ராதா : " Friendட போன் "
ரவி : " ஹ்ம்ம் என்னாலதான உங்கள அம்மா கிளாஸ் அனுப்புறது இல்ல Sorryங்க "
ராதா : " ஏன் Sorry நான்தான் வீட்ல சொன்னான் நான் வீட்ல இருந்து படிகிறனு "
ரவி : " ம்ம்ம்ம் "
இப்படி கொஞ்ச நேரம் பேசினர். அதன் பிறகு
2.30 மணி ஆனது அவளுடைய நண்பியின் வீட்டின் அருகில் சென்றான் ராதா வந்தாள் இருவரும் பேசி கொண்டுவந்தனர். ராதா கையில் இருந்த கவர் ஒன்றை பைக்கில் வைத்தாள்.
ரவி : " என்னகங்க இது? "
ராதா : " எல்லாம் நீங்க தந்த Letters உம் Birth day Card உம் "
ரவி : " என்னத்துக்கு என்னட்ட தாரிங்க? "
ராதா : " அம்மாக்கு இது தெரிஞ்சா பிரச்சினை வரும், எல்லாம் சரியான பிறகு நானே வாங்கி கொல்றன் சரியா? "
ரவி : " சரிங்க மேடம் "
அப்படியே இருவரும் வீடுகளுக்கு சென்றனர்.
சில நாட்கள் கழித்து ரவி Computer Institute ஒன்று செய்ய ஆலோசனை செய்து 3 நாட்களில் ஆரம்பித்தான்.
மாணவர்கள் நிறைய பேர் வந்தனர். நல்லபடியாக அதை செய்து வந்தான் ரவி.
ராதாவுக்கு இறுதி பரீட்சை நடைபெறுகின்ற தினம் வந்தது. ரவியும் 3 பாடங்களுக்கு Apply பண்ணி இருந்தான்.
Exam ஆரம்பம் ஆனது காலை 8.30 மணிக்கு ஆரம்பம் ஆனது 11.30 - 12.30 இடைவேளை விடப்படும். அந்த நேரத்திற்கு Computer Institute இல் அவனது நெருங்கிய நண்பனை வைத்து விட்டு சென்று பேசிவிட்டு வருவான்.
மறுநாள் ரவிக்கும் எக்ஸாம் இருந்தது. எக்ஸாம் முடிந்து இடைவேளைக்கு வழமைபோல் பேசி கொண்டனர்,
ரவி : " எக்ஸாம் எப்படி லேசா? "
ராதா : " ம்ம்ம் பரவாஇல்லங்க "
ரவி : " ம்ம்ம்ம் கைய கொஞ்சம் தாங்க "
ராதா : " ஏன்!!! தரமாட்டான் "
ரவி : " பெஸ்ட் ஒப் லக் சொல்லி Hand Shake பண்ணனும் அதுக்குதான் அதுதான் முறை "
ராதா : ( வெட்கத்துடன் ) " ம்ம்ம்ம் மாட்டன் "
ரவி : " தாங்களன் "
ராதா வெட்கத்துடன் கையை நீட்டினாள் ரவி பிடித்துகொண்டான். ஏதோ மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது இருவருக்கும். கொஞ்ச நேரம் பிடித்து கொண்டுஇருந்து விட்டான்.
எக்ஸாம் ஆரம்பமானது இருவரும் சந்தோசமாக போய் எழுதிவிட்டு முடிந்து இருவரும் பேசிக்கொண்டு சென்றனர்.
எக்ஸாம் நிறைவடையும் நாள் வந்தது. எக்ஸாம் முடிந்து இருவரும் மெது மெதுவாக பேசிக்கொண்டே சென்றுகொண்டிருந்தனர்.
ராதா : ( லேசான அழுகையோடு )" எப்ப மறுபடி பார்க்கிறது "
ரவி : ( கவலையாக ) " தெரியல பாப்போம் "
ராதா : " போய்ட்டு வாரங்க "
ரவி : " ம்ம்ம்ம் "
இருவரும் திரும்பி பார்த்து பார்த்து சென்றனர்.......................................
தொடரும் ......