அவர்களுக்கும் இனிக்கட்டுமே தீபாவளி

பண்டிகைக்காய் வாங்கி வைத்த புத்தாடை தனை உடுத்த

வாங்கிய நாள் முதலே பார்த்தேங்கிய எண்ணங்கள்...




திருநாளின் முன்னிரவே வெடி அனைத்தும் வெடித்துவிட

தடதடவென வத்தியோடு இங்கும் அங்கும் ஓடிய கால்கள்..




அங்கொன்றும் இங்கொன்றுமாய் இரவிலும் கேட்கும் வேட்டு சத்தத்திற்கு

பொருளிருந்தும் கீழே வைத்து காதுகளை பொத்திய கைகள்..




புதிய திரைப்படம் ஒன்று தொலைகாட்சியில் ஓடும்போதும்

வெடி சத்தம் கேட்கையிலே எனை அறியாது சிமிட்டிய கண்கள்..




ஒற்றை வெடியில் கற்றை காகிதம் சுற்றி வீட்டு வாசல் முன் வெடித்து

பெரும் குப்பை சேர்த்து வைத்து நிறைய வெடி வெடித்ததாக பெருமைகள்...




இவை எல்லாவற்றையும் விட நெகிழ்ந்து போகிறேன்...

"எங்க வீட்ல தீபாவளிக்கு இட்லி செஞ்சாங்க அம்மா..உங்க வீட்ல இனிப்பு செஞ்சாங்களா..?" என்று

என்னை மனம் குளிர புன்னகையோடு பார்த்து வினவிய அந்த ஏழை சிறுமிக்கு

வீட்டில் எஞ்சிய இனிப்புகளை பையில் போட்டுக் கொடுத்த பொது.




அனைவருக்கும் எனது இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..

தீபங்கள் ஏற்றிடுவோம் இல்லாதோர் வாழ்வினிலே...!

எழுதியவர் : கருனபாலன் (21-Oct-14, 10:21 am)
பார்வை : 88

மேலே