கண்ணீர் அஞ்சலி

இன்று ஹல்துமுல்ல(இலங்கை)
மண்சரிவில் உயிர்நீத்த என் உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி
தேயிலைச்செடிக்குள்
சீரழியும் வாழ்வு கண்டு
சீற்றம் கொண்டாளோ
பூமித்தாய்....?
அடக்கிகொண்டாள் அவள்
அணைப்பில்
ஏற்க மறுக்கின்றது உள்ளம் தான்
உறவுகள் உங்கள் பிரிவுதனை
தமிழன் வயிற்றில்
பிறந்ததினால்
தனக்கென துண்டும்
இடமில்லை....
தஞ்சம் தேடி சென்ற இடம்
தப்பாய் போனதோ நெஞ்சங்களே
மண்ணுக்குள் புதையும் நேரம்தனில்
மனதில் என்ன நினைத்தீரோ
மாண்டவர் மீண்டும் வருவதில்லை
மனதினை தேற்றிட முடியவில்லை
கல்லாய் இருக்கும் கடவுளிடம்
காரணம் கேட்க விருப்பமில்லை
இதயத்தின் வலிகளை
விழிதனில் ஏற்றி
வடிக்கின்றேன் விழிநீரை
கண்ணீர் அஞ்சலியாக........