ஒரு குழந்தையின் குமுறல்

கதிரவனுக்கு முன்
கண்விழித்தாய்
கைப்பிடி அரிசி தனில்
கஞ்சி வைத்தாய்

உன் இன்முகம்
பார்த்து தானே
இன்றைய விடியலும்
வந்ததம்மா

கையில் தேநீர்
கண்ணில் பாசம்
அன்னையே உன்னை
அணைத்துக்கொண்டேன்

குட்டி செல்லம் என
கொஞ்சியே நீ என்னை
குளிக்க வைத்தாய்
குழந்தையாக


பள்ளிக்கு செல்லவென்று
பதறிய என் பையில்
பகல் உணவு கஞ்சிதனை
பக்குவமாய் எடுத்து வைத்தாய்


உச்சி முகர்ந்தென்னை
முத்தமிட்டு அனுப்பி வைத்தாய்
அனுப்பும் போதே அறிந்தாயா
தாயே
என்னை நீ பிரிவாய் என்று...?

நான் கண் மறையும் முன்
உன்னை மண் மறைத்ததை
கனவாக இருந்திடவே
வேண்டுதம்மா என் உள்ளம்

சின்னதாய் நான் துடித்தால்
வடிப்பாயே கண்ணீர்
துடிகின்றேன் அம்மா நான்
அணைப்பாயா நீ என்னை ...??


வேண்டுவதெல்லாம் ஒன்று தான்
வேண்டும் அம்மா நீ எனக்கு
பூமி தாயே விடைகொடுங்கள்
என் அன்னை மீண்டு வர...!!

எழுதியவர் : கயல்விழி (30-Oct-14, 7:22 pm)
பார்வை : 100

மேலே