கனவுகள் மெய்ப்பட வேண்டும் - கவிதைப் போட்டி-II

இமைப் போர்வையில் - விழிகளுக்குள்
ஊமைப் படமாய் - விழித்து
உலவி வரும் பெண்ணே.

உன் சுவாசத்தில் - என்
உயிர்ப் பூ மலருதடி.
உந்திசை நோக்கியே அது
உருவத்தைத் திருப்பி ஏங்குதடி.

பருவத்தால் பருத்தவளே
உன் பார்வையை
என்பக்கம் திருப்ப மறுத்தவளே

பொறுத்தவன் வீழ்வதுண்டோ? - உயிரை
வெறுத்தவன் வாழ்வதுண்டோ? - உனக்குப்
பொருத்தமான - இந்த உயிர்ப்
பூவுக்கு புனர்வாழ்வுத் தருவாயடி.

நோவுக்கு மருந்தை அறிந்தவன் - உன்னால்
நோயுண்ட இப்பூவுக்கு நீதான் என தெரிந்தவன்.

அசைந்து செல்லும்
அழகு நிலவே - இப்பூவுடன்
பழகிப் பார் - மேலும் நீ
பௌர்ணமியாய் மிளிர்வாய்.

கனியிதழைக் கொண்ட
காரிகையே - இப்பூவுடன் உன் இதழ்
தூரிகையை தீட்டிப்பார்.
தூய வண்ணமாய் ஜொலிப்பாய்.

காதலே - என்
கனவுகள் மெய்ப்பட வேண்டுமாயின்
கனவுகளின் கணக்குகளை - அவளது
கவனத்தில் நிறுத்து. - என்காதல்
கனவு மெய்ப்பட வறுத்து.

தனிமை இருட்டில்
தவிக்குது இந்தப் பூ - அவளது
(இளமை) இனிமை காற்று
இணங்கினால் என்றுமே மத்தாப்பூ

எழுதியவர் : ச. சந்திர மௌலி (6-Nov-14, 5:44 am)
பார்வை : 322

மேலே