நட்பு

படிப்பு இருந்தால்
வருவேன் என்றது
பணம் .
பணம் இருந்தால்
வருவோம் என்றனர்
உறவினர்
அழகு இருந்தால்
வருவேன் என்றது
காதல்
அனைத்தும் இருந்தால்
வருவேன் என்றது
திருமணம்
எதுவுமே வேண்டாம்
நான் இருக்கிறேன்
உன்னோடு
என்றது நட்பு

எழுதியவர் : கயல்விழி (7-Nov-14, 6:48 pm)
Tanglish : natpu
பார்வை : 162

மேலே