பகுத்தறிவற்ற பறவையும் மாண்புமிகு மனிதரும்
விடியலை நாடி
விருப்பத்துடன் காத்திருக்கும் - பொழுது
புலர்ந்து புலர்வதற்குள்
புயலாய் விரைந்து புறப்படும்
அலைந்து திரிந்தே சேகரிக்கும் - ஆயினும்
அவற்றை பகிர்ந்தே சுவீகரிக்கும்
இனங்கள் பலவுண்டு அவற்றுள்ளும்
இனப் படுகொலை இல்லை இன்று வரை - சிறு
எள்ளையும் பகிர்ந்துண்ணும் பறவை - தன்
எல்லைக்குச் சண்டையிட்டதில்லை இதுவரை
உலவிச் செல்லும் அவை
உலகையே எல்லையாய் வரையறுக்கும்
பறந்து பறந்து சேகரித்தாலும்
பதுக்கி வைப்பதில்லை
புதியதாய் அமைத்த கூட்டை
புயல் வந்து களைத்தாலும்
பயம் கொண்டதில்லை
அற்புதப் படைப்பாம் பறவையினம்
அவற்றிடம் நம்மைப் பிரிப்பது நம் தலைக்கணம்
ஆறாவதாய் விளைந்த ஓரறிவு
அது படைப்பது ஏனோ பேரழிவு - இருந்திருப்போம்
இயற்கையின் ஓர் அங்கமாய் - பகுத்
தறிவைப் பெற்றதாலே ஆனோம் இயற்கையை
அழிக்கும் ஓர் சங்கமாய்!